Main Menu

சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டார் ; சாட்சியத்தில் ஹிஸ்புல்லா

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி  மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா  பாரா ளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.  

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து  விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள    பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்ட ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டார்,  

அவரது சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு:

கேள்வி:- உங்­களின் அர­சியல் பயணம் குறித்து கூறுங்கள்?

பதில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக எனது அர­சியல் வாழ்க்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1994 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரி­வானேன். பின்னர் பல வெற்றி, தோல்­விகள் எனக்கு அமைந்­தன. பிரதி அமைச்­ச­ரா­கவும், இரா­ஜாங்க அமைச்­ச­ராகவும் கட­மை­யாற்­றி­யுள்ளேன். பின்னர் ஜன­வரி நான்காம் திகதி இரா­ஜி­னாமா செய்­யப்­பட்டு கிழக்கு ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டேன். 

கேள்வி:- நீங்கள் இலங்­கையர் என நினைக்­கிறேன், அவ்­வாறு இருக்­கையில் “இலங்­கையில் நாங்கள் சிறு­பான்மை,  உலகில் பெரும்­பான்­மை­யினர் நாம்தான்” என நீங்கள் கூறி­யது சரியா?

பதில்:- இது எனது அர­சியல் கருத்து அல்ல, இது ஒரு பள்­ளி­வா­சலில் நான் கூறிய விடயம். எமது மக்கள்  அங்கு மிகவும் பயந்த சுபா­வத்தில் இருந்­தனர். அன்­றாட வாழ்க்கை அனைத்­துமே  ஸ்தம்­பிக்­கப்­பட்டு  இருந்­தது. வழ­மை­யாக எமது பெருநாள் பிரார்த்­த­னைகள் காலி  முகத்­தி­டலில் இடம்­பெறும். இம்­முறை அது நடக்­க­வில்லை. முஸ்­லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்­தனர். ஆகவே அவர்­களை அச்சமடைய வேண்டாம் எனக் கூறி உங்­களின் அன்­றாட வாழ்க்­கையை முன்­னெ­டுங்கள் என்றேன். இதன்­போதே  நாம் உலகில் பெரும்­பான்மை மக்கள். ஆகவே அச்­ச­ம­டைய வேண்டாம் எனக் கூறினேன். எனினும் ஊட­கங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்­டி­விட்டு பிர­சு­ரித்து விட்­டன. 

கேள்வி:- நீங்கள் இதனை நிரா­க­ரிக்­கி­றீர்­களா? 

பதில்:- நான் இலங்­கையன் என்ற எண்­ணத்­துடன் வாழ்­கிறேன். நான் எப்­போதும் நாடு என்ற உணர்­வுடன் வாழ்­கிறேன். பெளத்த நாடு என்ற எண்­ணத்தில் நான் பல கருத்­து­களை கூறி­யுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்­ச­ம­டையக் கூடாது என்றே  கூறினேன்.

கேள்வி:- சஹ்­ரானை சந்­தித்­துள்­ளீர்­களா?

பதில் :- ஆம் சந்­தித்தேன்.

கேள்வி:- எப்­போது என்ன நோக்­கத்தில் சந்­தித்­தீர்கள்?

பதில்:- கூறு­கிறேன். 2015ஆம் ஆண்டு தேர்­தலில் வேட்­பு­மனு முடிந்­த­வுடன் அவர் எம் அனை­வ­ரையும்  சந்­தித்துப் பேச அழைப்பு விடுத்தார். அப்­போது அவர் நல்ல மத­வாதி. குறிப்­பாக இளை­ஞர்கள்  அவ­ருடன் இருந்­தனர். தேர்தல் முடிந்­த­வுடன் எம் அனை­வ­ருக்கும்  அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் பலரும் ஏனைய பலரும் வந்­தனர்.

கேள்வி:- அர­சியல்வாதி­களைக் கூப்­பிட்டு பேசும் அள­விற்கு யார் இவர்? இவ­ருக்கு என்ன அதி­காரம் உள்­ளது? நீங்கள் ஏன் இவ­ருக்கு இவ்­வ­ளவு முன்­னு­ரிமை கொடுக்­கின்­றீர்கள்? அவ­ருக்கு அனைத்து கட்­சி­களையும் சந்­திக்க இருந்த நோக்கம் என்ன?

பதில்:- அப்­போது அவர் பயங்­க­ர­வாதி அல்ல, அவர் சிறந்த மதத் தலை­வ­ராக இருந்தார். அவ­ருக்­காக பல இளை­ஞர்கள் பின்­பு­லத்தில் இருந்­தனர். ஆகவே வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள அவர் தேவைப்­பட்டார். 

கேள்வி:- நீங்கள்  அவரைப் பயங்­க­ர­வாதி என ஏற்­க­மாட்­டீர்­களா?

பதில்:- அவர் பயங்­க­ர­வாதி தான். அதனை நான் மறுக்­க­வில்லை. ஆனால் அந்த காலத்தில் அவர் மதத் தலைவர்.  இளைஞர்கள் அனை­வரும் அவ­ருடன் இருந்­தனர். பல உடன்­ப­டிக்­கைகள் அவ­ரினால் போடப்­பட்­டன. 

கேள்வி:- என்ன உடன்­ப­டிக்கை ?

பதில்:- தேர்தல்  கூட்­டங்­களில் பாடல் ஒலிபரப்ப  முடி­யாது. பெண்கள் கூட்­டங்­க­ளுக்கு தனி­யாக வர வேண்டும் என்பதாகும்.    வாக்­கு­களைப்  பெற வேண்டும் என்­ப­தற்­காக நாம் அதனை ஏற்­றுக்­கொண்டோம். 

கேள்வி:-தேர்­தலில் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள எந்த உடன்­ப­டிக்கையையும் செய்­வீர்­களா? 

பதில்:- அவர் அப்­போது பயங்­க­ர­வாதி அல்ல, அவர் ஒரு மதத்தலைவர். அவர் பயங்­க­ர­வாதி என்றால் நாம் ஏன் சந்­திக்க போகின்றோம்? அப்­படி செய்ய மாட்டோம். அது மட்டுமல்ல அதன் பின்னர் எனக்கு எதி­ராக சில நட­வ­டிக்­கைகள் எடுத்தார்.  2015 காலப்­ப­கு­தியில் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரிடம் முறை­யிட்டேன். அதில் இருந்து எனக்கு எதி­ரா­கவே அவர் செயற்­பட்டார். 

என்னை அவர் 2000 வாக்­கு­களால் தோற்­க­டித்தார். அந்த சந்­திப்பின் பின்னர் அவரை நான் சந்­திக்­கவே இல்லை. ஏனெனில் அவர் எனக்கு எதி­ராக பல ஆர்ப்­பாட்­டங்­களைச்  செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிர­சாரம் செய்தார். நான் தோற்­க­டிக்­கப்­பட்ட கார­ணத்­தினால் என்னை தேசிய பட்­டி­யலில் இணைக்க வேண்டாம் எனக் கூறி ஆர்ப்­பாட்டம் செய்தார். என்­னுடன்  சூபி மக்கள் உள்­ளனர். அவர்கள் எனக்கு வாக்கு கொடுப்­பார்கள். அவர்­களை இவர்கள் தாக்­கினர். இது தொடர்பில் வழக்கு தொடுத்­துள்ளேன். இதில் ஒன்­பது பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் பல­ருக்கு பிடி­யாணை விடுக்­கப்­பட்­டது. அப்­போதில் இருந்து எனக்கு எதி­ராக பல எதிர்ப்­புகள்  வந்­தன.

இந்­தி­யாவில்  கேலிச் சித்­திரம்  ஒன்றை  எடுத்து அதில் எனது முகத்தைப் பொருத்தி முகப்­புத்­த­கத்தில் விமர்­சனம் செய்­தனர். அவர் நியாஸ் என்ற நபர். இவர்தான் தற்­கொலை தாரி­யாவார்.  என்னை மட்டும் அல்ல எனது குடும்­பத்­தையும் விமர்­சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரைத் தேடு­வ­தாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவ­ரது குழுவைக் கைது­செய்ய வேண்டும் என நானும் சூபி குழு­வி­னரும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதன் பின்னர் அவர் இருக்­க­வில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறி­னார்கள். அதன் பின்னர் அவரை நாம் சந்­திக்­க­வில்லை.  எனக்கும் அவ­ருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை இல்­லாது செய்ய நட­வ­டிக்கை எடுத்­தவர். இரா­ணு­வத்­தினர்  பல­ருடன் இவர் தொடர்பில் இருந்­தவர்.நியாஸும் அவ்­வாறு  இருந்தார். 

கேள்வி:- இது என்ன கதை, தெளி­வு­ப­டுத்­துங்கள்?

பதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்­கலாம். ஆமி மொய்தீன் என்­ப­வரும்  இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இரா­ணு­வத்­துடன் தொடர்பில் இருந்தார்.  இரா­ணு­வத்­துடன் இவர்கள் இருந்­தனர். இரா­ணு­வத்­துடன் வரு­வது போவதைப்  பார்த்தோம். அவர்கள் பல­மாக இருந்­தனர். நாம் என்ன கூறி­னாலும் அவர்­களை ஒன்றும் செய்ய முடி­யாது. 

கேள்வி:- இரா­ணு­வத்­துடன் தொடர்பில் இருந்­த­னரா? எப்­போதில் இருந்து? 

பதில்:- ஆம். 2015ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்­தனர். அனை­வ­ருமா என்று தெரி­யாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார். 

கேள்வி:- நீங்கள் எந்த கட்­சியில் அப்­போது இருந்­தீர்கள்? 

பதில்:- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இருந்தேன். கிழக்கில் பிர­தான வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கினேன். 

கேள்வி:- சஹ்­ரானின் அழைப்­புக்கு செல்ல நீங்கள் தீர்­மா­னிக்க அவ­ருக்கு இருந்த பலம் என்ன? 

பதில்:- வாக்கு  பலம் தான் 

கேள்வி:- நீங்கள் வாக்­கு­களை மட்டும் பார்த்தால் அவ­ருக்கு எத்­தனை பேர் ஆத­ர­வாக இருந்­தனர்  என நினை­கி­றீர்கள்?

பதில்:- இரண்­டா­யிரம், மூவா­யிரம்  வாக்­குகள், அப்­போது நான் மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்தேன், அவ­ரது அர­சியல் வெற்­றிக்­காக செயற்­பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனா­தி­பதி  மைத்­தி­ரியின் வெற்­றிக்­காக செயற்­பட்­டுக்­கொண்டிருந்தார். ஊரில் மூவா­யிரம்  வாக்­குகள் உள்­ளன என்றால் பலம் தானே? அதேபோல் அவர் நல்ல பேச்­சாளர்.  ஆகவே அது பலம் தான். 

இதற்­காக மட்டும் அல்ல இவரை தவிர வேறுவேறு அமைப்­பு­க­ளு­டனும் பேசினேன். தப்ளிக் ஜமாஅத்துடன் பேசினேன். பத்­தா­யிரம் வாக்­குகள் உள்­ளன. சூபி என்ற அமைப்பு உள்­ளது.  அவர்­க­ளிடம் ஆயிரம் வாக்­குகள் உள்­ளன. தாருல் என்ற அமைப்பு இவ்­வாறு பல அமைப்­புகள் உள்­ளன. அவர்­க­ளிடம் பேசுவோம்.இது சாதா­ரண விடயம். 

கேள்வி:- சஹ்­ரா­னுக்கு பாது­காப்பு உதவி கிடைத்­ததா? 

பதில்:- ஆம், சஹ்ரான்  எந்த சிக்­கலும் இல்­லாது அனைத்து சலு­கை­க­ளையும் பெறுவார். அவர்­க­ளுக்கு பொலிஸ் நெருக்­கடி இருக்­க­வில்லை. அவர் வேறு முஸ்லிம்  அமைப்­பு­களை விமர்­சித்து ஒலி­பெ­ருக்­கி­களைக் கொண்டு தாக்­குதல்  நடத்­துவார். 

கேள்வி:- அப்­ப­டி ­என்றால் அவ­ருக்கு அனு­மதி கிடைக்­குமா?

பதில்:- ஆம், சகல சலு­கை­க­ளையும்  பெற்றார். 

கேள்வி:- அவர் மதங்­க­ளுக்கு இடையில் வெறுப்­பு­ணர்­வையும்  முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக  வெறுப்­பு­ணர்­வையும்  ஏற்­ப­டுத்­தினார்.  அப்­ப­டியா? 

பதில்:- ஆம், அவர்  மத ரீதியில்  தாக்­குதல் நடத்­துவார். 2010-, 2011 காலங்­களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விட­யங்­களைக் கூறி ஒவ்­வொரு குழுக்­களில் இணைந்தார். அவர்­க­ளிடம் முரண்­பா­டுகள்  ஏற்­பட்டு அவர்­களே நீக்­கி­வி­டு­வார்கள். பின்னர் அவ­ராக ஒரு அமைப்பை உரு­வாக்­கினார். ஒவ்­வொரு வெள்­ளியும் ஏனைய மதங்­களை விமர்­சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மத­வா­தி­யாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்­தி­ருக்­க­வேண்டும். 

கேள்வி:- நீங்கள் ஐ.எஸ். அமைப்பை எதிர்க்­கின்­றீர்­களா? 

பதில்:- ஆம்.  நான் அதனை பாரா­ளு­மன்­றதில் கூட சிறப்­புரை ஒன்றில்  தெரி­வித்தேன். 

கேள்வி :- நீங்கள் அவ­ருடன் இணைந்து செயற்­பட்­டீர்கள் தானே? 

பதில்:- ஆரம்­பத்தில் எனக்கு அவர் ஒத்­து­ழைப்பு வழங்­கினார், ஆனால்  நான் தோற்­க­டிக்­கப்­பட்டேன்.

கேள்வி:- இவர் பயங்­க­ர­வா­தி­யாக மாறுவார் என நினைத்­தீர்­களா? 

பதில்:- இவர் பயங்­க­ர­வா­தி­யாக  மாறுவார் என நான் நினைக்­க­வில்லை. செய்­தியில் பார்க்கும் வரையில் நான் நினைத்­துக்­கூட பர்க்­க­வில்லை. 

கேள்வி:- பாட­சாலை நிகழ்­வொன்றில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன தானே? 

பதில்:- ஆம், மீரா பாலிகா வித்­தி­யா­லயத்தில் மாண­விகள் கலா­சார நடனம் ஆடிய கார­ணத்­திற்­காக அந்த இடத்தில் மேடை போட்டு மோச­மாக தாக்­கினார்.

கேள்வி:- தாக்­கினார் என்றால்? 

பதில்:- திட்­டினார். 

கேள்வி :- அதற்கும்  ஒலி­பெ­ருக்கி பொலி­ஸாரின் அனு­ம­தி­யுடன் வழங்­கப்­பட்­டதா?

பதில் :–  ஆம், பொலி­ஸாரின்  ஒத்­து­ழைப்­புடன் அவர் இந்த செயற்­பாட்டை செய்தார். 

கேள்வி :- அவர் ஒவ்­வொரு குழுவில் இணைந்து வெளி­யேற என்ன காரணம்? 

பதில்:- அவர் அங்கு சென்றால் அவர்­களின் அமைப்பு பிழை என கூறி இதை ஏற்­று­கொள்ள முடி­யாது என விவா­திப்பார். முடி­யாத நிலையில் அவர்­களே இவரை நீக்­கி­வி­டு­வர்கள்.

கேள்வி :- அப்­ப­டி­யென்றால் எதை சரி­யென கூறுவார் ?

பதில் :- அவர் மத விட­யங்­களில் இவ்­வாறு நடந்­து­கொள்வார்.   சில விட­யங்கள் தவறு இதனை இவ்­வாறு  செய்ய வேண்டாம் என கூறுவார். 

கேள்வி:- ஏனைய மதங்­களை விமர்­சிக்­க­வில்­லையா ?

பதில் :- எனக்கு தெரிந்த அளவில் அவர்  அவ்­வாறு  செய்­த­தாக தெரி­ய­வில்லை. 

கேள்வி :- உங்­களில் இருந்து அவர் முரண்­பட  என்ன காரணம்? 

பதில் : -இசைத்த  கார­ணத்­தினால் 

கேள்வி : இசையா ?

பதில் :- ஆம் நாம் இசை போட்ட கார­ணத்­தினால் தான் இதனை செய்தார்.

கேள்வி :- அவர்  இணைந்த குழுக்­களில் இசை போட­வில்­லையா? 

பதில் : அது தெரி­ய­வில்லை 

கேள்வி :- உங்­க­ளிடம் இருந்து விலக இசை கார­ண­மாக இருக்­காது 

பதில் :- ஆம்  என்­னுடன் சூபி மக்கள் உள்­ளனர். அவர்கள் முழு­மை­யாக என்­னுடன் உள்­ளனர். 

கேள்வி : சஹ்ரான்  சூபிக்கு எதி­ரா­ன­வரா? 

பதில் :- ஆம்,  முழு­மை­யாக எதிர்ப்பு 

கேள்வி :- அப்­ப­டி ­என்றால் ஏன் உங்­களை அழைத்தார் 

பதில் :- இல்லை அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்­ததைப் போல எனக்கும் அழைப்பு விடுத்தார். 

கேள்வி :- இறுதித் தேர்­தலில் உங்­க­ளுக்கு அவர் உத­வ­வில்­லையா ?

பதில் :- இல்லை, அவர் பிடி­யா­ணையில் இருந்தார்?

கேள்வி :- சஹ்­ரா­னுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத குற்ற முறைப்­பா­டுகள் செய்­தீர்­களா ?

பதில் :- பயங்­க­ர­வாதி சஹ்­ரானை நான் ஒரு­போதும் சந்­திக்­க­வில்லை. எனக்கு தெரிந்­தது மத தலை­வ­ரான சஹ்ரான். அவ­ரது மத செயற்­பா­டு­க­ளுடன் முரண்­பட்டு முறைப்­பாடு  செய்­துள்ளேன். ஆனால் பயங்­க­ர­வாதி என நான் எந்த முறைப்­பாடும்  செய்­ய­வில்லை. எனக்கு தெரி­ய­வில்லை, அவ­ரிடம் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இருந்­தது தெரிந்திருந்தால் நான் தான் முதலில் முறைப்­பாடு செய்­தி­ருப்பேன். 

அவர் கொல்­லப்­பட்­டதில் உல­கத்தில் அதிக மகிழ்ச்­சியில்  உள்­ளது நான் தான். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ்­கா­ரர்­க­ளுக்கு முழு  ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது அவர்கள் தான். இவர்­களால் எனக்கு வாக்கு இல்­லாது போனது. ஆகவே இப்­போது நான் மகிழ்ச்­சி­யாக  உள்ளேன். 

கேள்வி:- இந்த சம்­பவம் அனைத்தும் காத்­தான்­கு­டியில் தான் நடந்­தன. அது உங்­க­ளுக்கு தெரி­ய­வில்லை. ஆனால் ஏனைய முஸ்லிம் அமைப்­புகள் பல இவ­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­துள்­ளன. உங்­க­ளுக்கு ஏன் தெரி­ய­வில்லை. 

பதில்:எனக்கு அவர் பயங்­க­ர­வாதி என தெரி­யாது. இவ்­வாறு கொலை­கார அமைப்பு இவ­ரிடம் இருந்­தது என எனக்கு தெரி­யாது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அவர் ஊரில் இருக்­க­வில்லை எனக்கு ஒன்றும் தெரி­யாது. 

கேள்வி:- சஹ்­ரானின் குடும்­பத்­தினர் பற்றி உங்­க­ளுக்கு தெரி­யாதா?

பதில் : தெரி­யாது

கேள்வி:- சஹ்­ரானின் ஏனைய உறுப்­பி­னர்கள் பற்றி தெரி­யாதா?

பதில் :- சிலர் மீது பிடி­யாணை விடுக்­கப்­பட்­டது. தற்­கொலை தாரிகள் சிலர் மீதும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. அப்­போது  அவர்கள் ஊரில் இருக்­க­வில்லை. சில மாற்று குழுக்கள் அவர்­களின் பள்­ளியை நடத்­தினர்.

கேள்வி : -அவர்­களும் அடிப்­ப­டை­வா­தி­களா 

பதில் : ஆம் அவர்­களும் அடிப்­ப­டை­வா­திகள்தான், மத ரீதியில் இறுக்­க­மான கொள்கை  கொண்­ட­வர்கள். அவர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

கேள்வி :- திகனை சம்­ப­வத்தின் பின்னர் சஹ்­ரானின் வீடியோ காட்­சி­களில் அவர் பெளத்த விகாரை தாக்­குதல் குறித்து பேசி­யுள்ளார் பார்த்­தீர்­களா ?

பதில் :- ஆம் பார்த்தேன். 

கேள்வி :- எப்­போது?

பதில் :- இந்த தாக்­கு­தலின் பின்னர் தான் அவற்றை நான் பார்த்தேன். 

கேள்வி:- நீங்கள் ஆளு­ந­ராக இருந்த காலத்தில் இது குறித்து எதையும் கூறி­னீர்­களா?

பதில் : இல்லை.

கேள்வி : உங்­க­ளுக்கு யாரும் கூறி­னார்­களா? 

பதில் : இல்லை தாக்­குதல் நடக்கும் வரை  தெரி­விக்­க­வில்லை. 

கேள்வி : மோட்டார் சைக்கிள் வெடிக்­கப்­பட்ட போது ஆளுநர் நீங்கள், நீங்கள் எத­னையும் தெரிந்­தி­ருக்­க­வில்­லையா?

பதில் : -உண்­மையில் பால­முனை  பகு­தியில் இடம்­பெற்­றது. நான் காத்­தான்­குடி பொலிஸா­ரிடம்  கேட்டேன். விசா­ரணை நடத்­து­வ­தாக கூறி­னார்கள். எனக்கு இது இலக்­காக இருக்­கலாம் என்றும்  எனது பாது­கா­வலர் கூறினார். என்­னைப் ­பா­து­காப்­பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

கேள்வி : யாரு­டைய இடம் 

பதில் :அது தெரி­யாது 

கேள்வி:வவு­ண­தீவு சம்­பவம், அது பற்றி என்ன நினை­கி­றீர்கள் ?

பதில் : அது ஒரு சம்­பவம், அது எனக்கு தெரி­யாது. அப்­போதும் நான் பொலி­ஸிடம் கேட்டேன். மாவீரர் தினம் நடக்க ஒருநாள் இருந்­தது. ஆகவே இது அந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்டது என்­றனர். அதற்கு அப்பால் சிந்­திக்­க­வில்லை. 

கேள்வி: பின்னர் அறிந்­து­கொள்ள முடிந்­ததா ?

பதில் :ஆம், சஹ்ரான் குழு செய்­த­தாக தெரியவந்­தது. 

கேள்வி :- வெடி­பொருள் அந்த ஊரில் உள்ள  எவ­ரா­வது சிலரால் வழங்கி இருக்க முடியும் என நீங்கள் நினைக்­க­வில்­லையா?

பதில்:- அது குறித்து விசா­ர­ணைகள் நடக்­கின்­றது. எவ்­வாறு கிடைக்­கப்­பெற்­றது. என்­றது தேடப்­பட்டு வரு­கின்­றது

கேள்வி :- ஏனைய கட்­சி­யினர் வந்­த­தாக கூறி­னீர்கள் அவர்­களும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்பில் இருப்­பார்கள் என நினைக்­கின்­றீர்­களா ?

பதில்: இல்லை  அதற்­கான எந்த வாய்ப்பும் இல்லை. காத்­தான்­கு­டியில்  எந்த அர­சியல் தலை­வர்­களும்  பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு வழங்க மாட்­டார்கள் என்று உறு­தி­யாக கூறுவேன். 

கேள்வி:- காத்­தான்­குடி அடிப்­ப­டை­வாத பகுதி  என நம்­பு­கி­றீர்­களா?

பதில் :- இல்லை 

கேள்வி :- காத்­தான்­கு­டியில் எத்­தனை மொழிகள் ?

பதில் : மூன்று மொழிகள் 

கேள்வி :-அரபு மொழி ஏன் அங்கு? 

பதில் :இங்கு மூன்று மொழிகள் உள்­ளன. அரபிக் இங்கு இல்லை. ஆனால் சுற்­றுலா துறைக்­காக அர­பிகள் வரு­வதால் எமக்கு அவர்­களைக் கவர வேண்டும். அதற்­காக நாம் இதனை செய்­ய­வேண்டும். இது சட்ட விரோ­தமோ அர­சியல் அமைப்­பிற்கு மாறா­னதோ என நினைக்க முடி­யாது. 

கேள்வி :- அர­பிகள் ஏன் அரபி எழுத்தை பார்த்து வரு­கின்­றனர். வேறு நாடு­களில் எமக்கு அப்­படி இல்­லையே?

பதில் :-  அப்­படி அல்ல, நாம் சுற்­றுலாத் துறையை கவர இவற்றை செய்­கின்றோம். கிழக்கு மாகாண சபையில் அங்­கீ­காரம் பெற்றோம். 

கேள்வி : -காத்தான்­கு­டியில் ஈச்சம் மரம் நட என்ன காரணம்? 

பதில் :- உண்­மையில் காத்­தான்­கு­டியில் மரம் நட சில தீர்­மானம் எடுத்தேன். பசி­யா­லைக்கு சென்ற போது வேறு சில  மரம் நட தீர்­மானம் எடுத்தோம். ஆனால் எமது பிர­தேச காலத்­திற்கு ஏற்ப இவை சரி­வ­ர­வில்லை ஆகவே ஈச்சம் நடலாம் என தீர்­மானம் எடுத்தோம். எமது பிர­தேச வெப்­பத்­துக்கு அமைய தீர்­மானம் எடுத்தோம்.

கேள்வி: ஏன் பனை­மரம் தெரி­வு­செய்­ய­வில்லை? 

பதில் :-  ஈச்சம் மரம் தெரிவு செய்தோம். பனை மரமும் நடலாம் 

கேள்வி: இதனை அகற்­று­வ­தற்கு தீர்ப்பு வழங்­கிய நீதி­ப­தியை மாற்ற நட­வ­டிக்கை எடுத்­த­தாக கூற­ப்ப­டு­கின்­றதே? 

பதில்:-இது குறித்து வழக்கு இருப்­பதால் நான் கருத்து கூற­வில்லை 

கேள்வி :- பாரா­ளு­மன்­றத்தில் நீங்கள் கூறிய கருத்­துக்கள், இரத்த வெள்ளம் ஒன்று வரும் என்­றீர்கள், சஹ்­ரானும் அதனைக் கூறினார். அதேபோல் போரா­டுவோம்  என்­றீர்கள். இதெல்லாம் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­னீர்கள்?.

பதில் :-வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி சிலர் பேசும்  போதோ வடக்கு கிழக்கை இணைக்க நாம் விட­மாட்டோம். அவ்­வாறு பல­வந்­த­மாக இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறினேன். இந்த இணைப்பை விட­மாட்டோம். அதற்கு ஏதி­ராக ஆயுதம் எடுப்போம் போரா­டுவோம் என்று கூறினேன்.

கேள்வி:- வடக்கு – கிழக்கு இணைந்தால் ஆயுதம் ஏந்­து­வீர்கள் என்­கின்­றீர்­களா? 

பதில் :_ஆம், நான் அல்ல எமது இளைஞர் கள்.

கேள்வி: இப்­போது கூறி­னீர்கள், நீங்கள் என? 

பதில் ஆம், 

கேள்வி :-இது ஒரு அச்­சு­றுத்தல், ஜன­நா­ய­கத்தை கையா­ளாது வன்­மு­றையை கையில் எடுப்­ப­தாக கூறு­கின்­றீர்கள், நீங்கள்  இல்லை என்றும், முஸ்­லிம்கள் என்றும் கூறு­கின்­றீர்கள். முஸ்­லிம்கள் ஆயுதம்  எடுத்து வன்­மு­றையை கையில் எடுப்­பார்­களா?

பதில்:- நான் கூறு­வது, முஸ்­லிம்கள் வடக்கு – கிழக்கு இணைப்­பிற்கு எதி­ரா­ன­வர்கள். அதை செய்தால் இது நடக்கும் என்றேன்.

கேள்வி :- ஆயுதம் எடுப்­ப­தா­கவா? 

பதில் :- ஆம், மக்கள்.

கேள்வி :- ஆகவே நீங்கள் வன்­மு­றையை கையில் எடுக்­கின்­றீர்கள் நீங்கள் அச்­சு­றுத்தல் விடு­துள்­ளீர்கள்? 

பதில் :- எமது பொறுப்பு இவற்றை அனு­ம­திக்கக்கூடாது என்­பது. ஆகவே இது நடக்க கூடாது என்று தான் நான் கூறினேன். 

கேள்வி:   சஹ்­ரானின்  பாது­காப்பு இல்லம் பற்றி தெரி­யுமா ?

பதில் :-இல்லை 

கேள்வி:- மாகாண சபை பாட­சா­லைகள் தேசிய பாட­சா­லை­களாக மாற்ற கோரிக்கை விடு­தீர்­களா? 

பதில் ஆம், அவ்­வாறு விடுத்தேன். 

கேள்வி:- ஆளு­ந­ராக நீங்கள் இருந்த  காலத்தில் மாகா­ண ­சபை கலைக்­கப்­பட்ட நேரத்தில் இந்த கோரிக்கை விடுத்­தது சரியா?

பதில்:- அப்­படி அல்ல, முன்­னரும் இவ்­வாறு சில விட­யங்கள் இடம்­பெற்­றன. நான் தனி­யாக தீர்­மானம் எடுக்­க­வில்லை. நான் அனு­மதி வழங்­கு­வது வழமை.

கேள்வி :- ஆளு­ந­ராக இருந்­து­கொண்டு பாட­சா­லை­களை மத்­திய அர­சுக்கு கொடுக்க நட­வ­டிக்கை எடுத்­தது ஏன் ?

பதில் :-பணம் இல்லை, நடத்த முடி­யாது ஆகவே சிக்கலில் இருந்­தது. அபி­வி­ருத்தி செய்யும் போது இவற்றை கருத்தில் கொண்டேன். இது நான் மட்டும் செய்­ய­வில்லை. 

குழு: -மாகா­ண­ச­பையை பல­வீ­னப்­ப­டுத்­து­கி­றீர்கள். இது முறைப்­பா­ட­ாக ­கூ­ற­வில்லை.  

கேள்வி :- ஹிரா நிறு­வனம் பற்றி கூறுங்­களேன் ?

கேள்வி :-எவ்­வ­ளவு நிதி வந்­தது

பதில் :- முன்­னூற்று ஐம்­பது மில்­லியன் 

கேள்வி: கிழக்கு பல்­க­லைக்­க­ழக்கம் ?

பதில்:-  நாம் எந்த இன மத அடிப்­ப­டையில் பார்த்தும் எடுக்­க­வில்லை. ஆனால் பெரும்­பான்மை முஸ்லிம் மாண­வர்கள் வந்­தனர்.

கேள்வி: மகா­வலி அபி­வி­ருத்தி இடம் ஒன்­றினை நீங்கள் பெற்­றீர்கள் ஏன்?

பதில்:-  ஆம், தற்­கா­லி­க­மாக நிறு­வனம் ஒன்றே இருந்­தது, ஆகவே நிரந்­த­ர­மாக ஹீரா நிறு­வ­னத்தை அமைக்க இதனை கோரினோம். அதன் பின்னர் உயர் கல்வி நிறு­வ­ன­மாக நாம் கோரிக்கை அறிக்கை ஒன்­றினை உயர் கல்வி அமைச்­சுக்கு  விடுத்தோம். இதில் சில முன்­மொ­ழி­வு­களும் இருந்­தன. ஆகவே மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பெயரில் ஆவ­ணங்கள் தயா­ரித்து மகா­வலி நிறு­வன நிலத்தை பெற்­றுக்­கொண்டோம். இந்த கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு அர­சினால் அனு­மதி கிடைக்­கப்­பட்­டது. 35 ஏக்கர் இருந்­தது. 

கேள்வி:- நீங்கள் வகாப் வாதத்தை ஆத­ரி­கின்­றீர்­களா ?

பதில் :- இல்லை, ஒரு­போதும் ஆத­ரிக்­க­வில்லை.

கேள்வி :- கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் ஷரிஆ பல்­க­லைக்­க­ழ­கமா?

பதில்:- அவ்­வாறு ஒன்றும் இல்லை, நான் இதனை அர­சாங்­கத்­துடன் இணைந்து முன்­னெ­டுக்க சகல விதத்­திலும் தயா­ராக உள்ளேன். ஆனால் ஊட­கங்கள் இதனை தவ­று­த­லாக விமர்­சித்து வரு­கின்­றன. இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் நிர்­வாக அதி­கா­ரிகள் சிங்­க­ள­வர்கள். அவர்­களின் பெயர்­களை நான் கூற விரும்­ப­வில்லை. சிலர் தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தை விரும்­ப­வில்லை. சைட்டம் மூடப்­பட்­டது. அது­போன்று எங்­க­ளையும் இலக்கு வைக்­கின்­றனர். நான் எந்த இணக்­கத்­துக்கும் தயா­ராக உள்ளேன். இது எமது அப்­பாவி மக்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. நான் ஒரு சமூக சேவை­யாக இதனை பார்க்­கிறேன். எமது மக்­க­ளுக்­காக நான் எதையும் செய்ய தயா­ராக உள்ளேன்.

கேள்வி :- ஹிரா மூலம் எத்­தனை பள்­ளி­வாசல் உரு­வாக்­கப்­பட்­டது

பதில் :- நிறைய அமைக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி :- சவூதி நிதி வரு­கின்­றது, அவர்கள் சூபிக்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வது இல்­லையே ? 

பதில் :- அவர்­க­ளுக்கு பிடிக்­காது. ஆனால் நிதி எனக்கு வரு­கின்­றது. எனக்கு பிரி­வினை முக்­கியம் இல்லை. மக்­களின் சேவ­க­னாக நான் சேவை செய்­கின்றேன்.   தமிழ் மக்­க­ளுக்கும் உதவி செய்­துள்ளேன். 

கேள்வி :- அப்துல் ராசிக் யாரென்று தெரி­யுமா

பதில் :ஆம் 

கேள்வி : அவ­ருடன் உங்­களின்  பழக்கம் எப்­படி? 

பதில் : தொலை­பே­சியில் பேசி­யுள்ளோம். இந்த பிரச்­சி­னை­களின் பின்னர் பேசினார். இரு தினங்­க­ளுக்கு முன்­னரும் பேசினேன்.

கேள்வி :- அவ­ருடன் உங்­க­ளுக்கு நெருக்­க­மான நட்பு உள்­ளதா?

பதில் :-அப்­படி என்று இல்லை, இந்த பிரச்சினைக்கு பின்னர் பேசினோம். 

கேள்வி :அவர் ஐ.எஸ். கொடிகளுடன் கிழக்கில் செயற்பட்டாரா?

பதில் :அப்படி ஒன்றும் எனக்கு தெரியாது 

அவர் ஐ.எஸ்.  பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ளதாக இங்கு வந்த இருவர் கூறினார்கள்? 

பதில் :- அவற்றை நான் கேட்டதில்லை, ஆனால் தௌவ்ஹித் என்ற பெயருக்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒருவர் பயங்கரவாதி என்றால் அவரை  விசாரிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதி என கூற முடியாது. ராசிக் ஐ.எஸ். என்று எனக்கு தெரியாது.

கேள்வி :- சஹ்ரான் போன்று எத்தனை பேர் உள்ளனர்?

பதில்:- இருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அறிந்துகொள்ள முடிந்தது. 

கேள்வி :- இந்த தாக்குதல் நடக்கும் வரை சஹ்ரான் அச்சுறுத்தலானவர்  என்று தெரியவில்லையா?

பதில்:- இல்லை, இப்போது தான் தெரியும். 

கேள்வி:- உங்களின் பாதுகாப்புக்கு உள்ளவர்கள் கூறவில்லையா ? 

பதில் :- இல்லை, அப்படி ஒன்றும் தெரிவிக்கவில்லை. 

கேள்வி :- காத்தான்குடியை அரபு மயமாக்கியது நீங்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது, இதனை இல்லை என்கிறீர்களா?

பதில்: இது அரபு மயம் அல்ல. எமது மக்களின் அடையாளம் அவ்வாறு உள்ளதால் அதனுடன் இணைந்து செல்லும் வகையில் செய்தோம். கட்டடக்கலை தானே? யாழில் இந்து கலாசார முறைமை உள்ளது, தெற்கில் பெளத்த முறைமை உள்ளது.  அது போன்று தான். 

கேள்வி:- சஹ்ரான் கட்டளைகளை விதித்த காலத்தில் கூட உங்களுக்கு அவரின் நிலைமை புரியவில்லையா?

பதில்:- அவர் அடிப்படைவாதிதான். ஆரம்பத்தில் இருந்து அவர் அடிப்படைவாதி என்று  தெரியும். ஆனால் அவர் பயங்கரவாதி என எனக்கு தெரியாது. 

பகிரவும்...