Main Menu

சமூக ஊடகங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை கட்டுப்பாடுகளை வைப்பதற்கான முதல் படி

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவுசெய்யும் நடவடிக்கை மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை என மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒடுக்குமுறை இருக்கக்கூடும் என்பதை இது காட்டுகின்றதாக குறிப்பிட்டுள்ள அவர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்ய அரசாங்கம் ஏன் விரும்புகிறது என்றும் கேள்வியெழுப்பியுயள்ளார்.

இதேவேளை கருத்து சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் மக்கள் மீது கட்டுப்பாடுகளை வைப்பதற்கான முதல் படியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் முகபுத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகத்தை பயன்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...