Main Menu

பரிஸ் விமான நிலையத்தில் போலிக் கொரோனாச் சான்றிதழ் – சுற்றி வளைத்த காவற்துறை

பரிஸ் சார்ள்-து-கோல் விமான நியைலத்தில், போலிக் கொரோனாச் சானிதழ் வழங்கிய கும்பல் ஒன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
பல விமான சேவைகள், 72 மணியத்தியாலங்களிற்கு உள்ளான, கொரோனா PCR-T பரிசோதனைச் சான்றிதழில், கொரானாத் தொற்று இல்லை என்று ஊறுதிப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிப்பார்கள்.

இதனைச் செய்யாமல் போலிச் சான்றிதழை வாங்கிப் பயணம் செய்யும் சட்டவிரோதச் செயல் முக்கியமாக ஆபிரிக்கா செல்லும் விமானங்களில் நடந்து வந்துள்ளது.

எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமான சேவையில், அடிஸ்-அபேபா செல்லும் ஒரு பயணியின் கொரோனத் தொற்றுச் சான்றிதழைப் பரிசோதனை செய்தபோது, அது போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர். அதே போன்ற பல போலிச் சான்றிதழ்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புக் காவற்துறையினர் (PAF) செய்த விசாரணையில், ஒரு கும்பல் சிக்கியுள்ளது. பெண் உட்பட 29 இலிருந்து 59 வயதுடைய 7 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

இவர்களின் கணினியில் 200 இற்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்கள் இருந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் 200€ முதல் 300€ வரை விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...