Main Menu

‘சகோதரத்துவ ஆதரவினை பிரான்ஸ் வழங்கும்!’ – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்

நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அதன்போது உக்ரைனுக்கு ‘சகோதரத்துவ ஆதரவினை பிரான்ஸ் வழங்கும்!’ என குறிப்பிட்டார்.

மக்ரோன் தெரிவிக்கையில், ‘உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அடுத்து வரும் நாட்கள் மிக இறுக்கமானவை. பல ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். நான் எனது முழுமையான ஆதரவை உக்ரைனுக்கு வழங்குகின்றேன்!’ என தெரிவித்தார்.

மேலும், ‘பிரான்சோ அல்லது ஐரோப்பாவோ யுத்தத்தை விரும்பவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து விளாடிமிர் புட்டினுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து வருகின்றேன். யுத்தம் எனும் சூழ்நிலையை உருவாக்காமல் சமரச தீர்வை காண்போம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். ஆனால் புட்டின் ‘போரை தேர்தெடுத்துள்ளார்!’ எனவும் மக்ரோன் தெரிவித்தார்.

“இது இரஷ்யாவுக்கும் NATO-வுக்குமான யுத்தம் இல்லை. NATO நாடுகள் எதுவும் உக்ரைனில் இல்லை. இரஷ்யா தாக்கப்படவில்லை. மாறாக இரஷ்யாவே உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளது!’ எனவும் ஜனாதிபதி உரையின் போது குறிப்பிட்டார்.

15 நிமிடங்கள் வரை நீடித்த இந்த உரையின் போது மக்ரோன் ‘பிரான்ஸ்-ஐரோப்பிய ஒன்றிய-உக்ரேனிய’ கொடிகளுக்கு முன்னால் நின்று உரையாற்றினார். அதேவேளை, மிக தீவிரமான தொனியிலும் உரையாற்றியிருந்தார்.

பகிரவும்...