Main Menu

கோத்தா ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எமது தரப்புக்குள் எவ்வித எதிர்ப்புகளும் இல்லை – மகிந்தானந்த

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமது தரப்புக்குள் எந்த எதிர்ப்புக்களும் காணப்படவில்லை. அவை அனைத்தும் வெறுமனே அவர் மீதுள்ள அச்சத்தின் காரணத்தால் வெளியிடப்படும் புனை கதைகளேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தகமே தெரிவித்தார். 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு உங்களுடைய தரப்புக்குள்ளேயே எதிர்ப்புக்கள் காணப்படுகின்றனவே எனக் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எமது தரப்புக்குள் எந்த எதிர்ப்புக்களும் காணப்படவில்லை. அவை அனைத்தும் வெறுமனே அவர் மீதுள்ள அச்சத்தின் காரணத்தால் வெளியிடப்படும் புனை கதைகளேயாகும்.

எம்முடன் இருக்கும் அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டினை எட்டியுள்ளார்கள். அதன் பிரதிபலிப்பினை தேசிய மாநாட்டின் மேடையில் உங்களால் அவதானிக்க முடியும். எமது தரப்பானது, நாட்டினை அழிக்கும் கொள்கைகளை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டினைக்கொண்டிருக்கின்றது. 

மேலும் நாட்டின் தேசியபாதுகாப்பு, பொருளாதார அபிருத்தி, நிலையான சமாதானம் உள்ளிட்டவற்றில் கவனத்தில் கொண்டு எதிர்காலம் மிக்க இலங்கையை கட்டியெழுப்பவல்ல ஊழல் மோடிகள் அற்ற தலைமைத்துவதற்கு ஆதரவளிப்பததெனவும் ஏக தீர்மானித்திற்கு வந்துள்ளன. 

இந்த இலட்சணங்களைக் கொண்ட தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒருநபராக கோத்தாபய ராஜபக்ஷவே காணப்படுகின்றார் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. ஆகவே அவரை யாரும் விமர்சிக்கவில்லை. அவரை ஆதரிப்பதென்றே அனைவரும் ஒருமித்து இணக்கம் வெளியிட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...