Main Menu

கோத்தாபயவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு வார்த்தை?

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச என்னை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும்  இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய முன்னணியின்  சஜித்பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபய  ராஜபக்சவிடம் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் நாங்கள் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தவிர படையினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பது, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்களும் உள்ளன என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்த பின்னர் முடிவெடுப்போம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...