Main Menu

கொவிட்-19 நெருக்கடி: அரச குடும்பத்திற்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் அரச குடும்பத்தினர் 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

அரச குடும்பத்தின் 2019-20ஆம் ஆண்டு நிதி அறிக்கையை அரச பொருளாளர் சர் மைக்கேல் ஸ்டீவன்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.

உலக சுகாதார நெருக்கடி உலகெங்கிலும் எழுவதற்கு முன்பே அதில் சேர்க்கப்பட்ட செலவினங்களில் பெரும்பாலானவை வந்தாலும், தொற்றுநோய் பிரித்தானிய அரச குடும்பத்தின் வருமானத்தில் ஒரு நீடித்த விளைவை எவ்வாறு ஏற்படுத்தும் என்பதை அவர் விளக்கினார்.

அரச கட்டடங்களுக்கு வருபவர்களிடமிருந்து வருமானம் இல்லாததால் மூன்று ஆண்டுகளில் 15 மில்லியன் பவுண்டுகள் பொது நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று ஸ்டீவன்ஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்கள் முக்கிய இறையாண்மை மானியத்தையும், இறையாண்மை மானியத்திற்கு கூடுதலாக நாங்கள் உருவாக்கும் வருமானத்தையும் பார்த்தால், இவை இரண்டும் ராணியின் உத்தியோகபூர்வ கடமைகளை ஆதரிக்கின்றன.

கொவிட்-19 தாக்கத்தால் றோயல் சேகரிப்பு அறக்கட்டளையின் வருமானத்தில் கணிசமான குறைப்பை எதிர்பார்க்கிறோம்’ என கூறினார்.

தொற்றுநோயின் விளைவாக கூடுதல் நிதி கேட்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ கடமைகளுக்காகவும், பக்கிங்ஹாம் அரண்மனையின் 468.5 மில்லியன் டொலர்கள் புதுப்பித்தலுக்காகவும் ராணி அதே 110 மில்லியன் டொலர்களை தொடர்ந்து பெறுவார்.

பகிரவும்...