Main Menu

கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிப்பு: பிரான்ஸில் முகக் கவசம் அணிவது கட்டாயமாகிறது!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது.

முக்கியமாக பல்பொருள் அங்காடிகள், வேலைத்தளங்கள், பொதுமக்களை உள்வாங்கும் இடங்கள் போன்ற அனைத்திலும் கட்டாய முகக்கவசம் அணிவது, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி தேசிய தின உரையில், கட்டாய முகக் கவச உத்தரவு அடுத்த மாதம் 1ஆம் திகதியிலிருந்துதான் அமுலுக்கு வரும் என்று ஜனாதிபதி இமானவல் மேக்ரான் அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் இதனை விரைவுப்படுத்தியுள்ளார்.

இந்த எச்சரிக்கைகள், பிரான்ஸின் அரசு கொரோனாத் தொற்று மீண்டும் ஆரம்பித்திருப்பதை நிரூபிப்பதாகவே உள்ளது. இதனிடையே லார் பிராந்தியத்தின் மேயேன் பகுதியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் திடீரென தீவிரமெடுத்துள்ளது.

பகிரவும்...