Main Menu

கொரோனா வைரஸ் : பிரான்சில் நாளாந்த தொற்று திடீர் அதிகரிப்பு

பிரான்சில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 180,777 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 115,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென தொற்று அதிகரித்துள்ளது.

அதேவேளை, மருத்துவமனையில் 20,742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,604 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

146 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக 141,118 பேர் பிரான்சில் சாவடைந்துள்ளனர். 

பகிரவும்...