Main Menu

கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது – ஹர்ஷவர்தன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், பிரதமர் மோடி தலைமையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைவரம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேற்படி தெரவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  “இந்தியாவில் கொரோனா வைரஸ் இரட்டிப்பு ஆகும் கால அளவு, முன்பு 11.5 நாட்களாக இருந்தது.

கடந்த 3 நாட்களாக, இந்த காலஅளவு 13.6 நாட்களாக வேகம் குறைந்துள்ளது. அதுபோல், இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3.1 ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில், குணமடைபவர்கள் விகிதம் 37.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடப்பதற்கு 106 நாட்கள் ஆனது. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில், 80 ஆயிரம் எண்ணிக்கை 44 முதல் 66 நாட்களில் எட்டி விட்டது. எனவே, பிரதமர் மோடி தலைமையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும்.

இரண்டு  ஆண்டுகளுக்கு அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். யாரும் மருத்துவ பணியாளர்களை புறக்கணிக்கக் கூடாது. அறிகுறி வந்தவுடன் பரிசோதனைக்கு வர வேண்டும். ‘ஆரோக்ய சேது’ செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...