Main Menu

கொரோனா பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகள் இலங்கைக்கு

உலக பிரசித்திப்பெற்ற அலிபாபா நிறுவனம் இலங்கையில் கொரோனா நோயை பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகளை இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இந்த கருவிகளை தாங்கிய சிறப்பு விமானம் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது.

அதேபோல் சீனாவும் கொரோனா தொற்றாளர்களை பரிசோதிக்கும் 20,000 கருவிகளை அடுத்தவாரம் அளவில் நாட்டுக்கு அனுப்பவுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என பரிசோதிக்கும் பாதுகாப்பு கூடாரம் ஒன்றை இரத்தினபுரி வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

அதேபோல் கொரோனா தொற்றாளர்களை பராமறிக்க கண்டி வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் புதிய வாட்டின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தகூடிய 25 கட்டில்கள அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் 2004 ஆம் ஆண்டு மாணவர்கள் இதனை அன்பளிப்பு செய்துள்ளனர்.

கெப்பெட்டிபொல் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட தாதியர்கள் கொவிட் 19 வைரஸ் தொடர்பான பாடல் ஒன்றை இயற்றியுள்ளனர்.

பகிரவும்...