Main Menu

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு :உலகளவில் இஸ்ரேல் முன்னிலை

உலகின் மிக உயர்ந்த விகிதமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இஸ்ரேல் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேல் 100 பேருக்கு 11.55 பேர் என்ற அடிப்படையிலும் பஹ்ரைன் 3.49 பேர் என்ற அடிப்படையிலும் இங்கிலாந்து 1.47 பேர் என்ற அடிப்படையிலும் தடுப்பூசியை வழங்கியுள்ளன.

உலகெங்கிலும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அறிவித்த அமெரிக்கா குறித்த கால எல்லைக்குள் வெறும் 2.78 மில்லியன் பேருக்கே தடுப்பூசியை வழங்கியுள்ளது.

இதற்கிடையில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியா ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் கோவாக்சின்ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டின் நடுப்பகுதியில் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.

பகிரவும்...