Main Menu

கொங்கோவில் எபோலா வைரஸ் – 600 பேர்வரை பலி…

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட அதிகப்பட்ச உயிரிழப்பு இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட கொங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளதென தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மேலும் 1,041 பேருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகள் மூலம் சுமார் 70,000 பேருக்கு மேல் இந்த நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் பெரிய நகரகளுக்கு எபோலா நோய் பரவுவதனையும் தடுத்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக கொங்கோ அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆ;பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸின் பாதிப்பால் 15,145 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதில், 11,000 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

பகிரவும்...