Main Menu

கீழடி கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் – மு.க.ஸ்டாலின்

கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கீழடியை நேரில் சென்று பார்வையிட்ட அவர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், கீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போலே வான் வரை பறந்து உயர்ந்து சென்றது.

உங்களில் ஒருவனான எனக்கு மட்டும் கிடைத்திருக்கும் பெருமை அல்ல இது. உங்கள் ஒவ்வொருவருக்குமான பெருமை. தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தரணிபோற்றும் பெருமை.

இலக்கியங்கள் காட்டிய தொல் தமிழர் பெருமை பற்றிய சான்றுகள் அகிலத்தார்க்கு மெய்ப்பித்திருக்கின்றன கீழடி அகழ்வாய்வுகள். காண அரிய சான்றுகள் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

வேளாண்மை போற்றிய சங்கத் தமிழர்கள் பசு, எருமை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்திருப்பதையும், உணவுக்காக விலங்குகளைப் பயன்படுத்தியிருப்பதையும் ஆய்வுகளில்அறிய முடிந்திருக்கிறது.

இரும்பினால்ஆன பொருட்கள், தங்கத்தால் ஆனஅணிகலன்கள் அனைத்திலுமே கலைமிளிரும் வேலைப்பாடுகள் மிகுந்திருந்தன.

கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும் செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள். அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...