Main Menu

கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல் பாராளுமன்றத்தின் அழைப்பை ஏற்றார்

சுவீடன் நாட்டு பருவநிலை மாற்ற ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல் நாட்டின் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள உள்ளார்.

சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து கடந்த ஆண்டு விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியவர் கிரேட்டா தன்பெர்க்.
அவரது போராட்டம் பிரேசில், உகாண்டா, நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் இளம் ஆர்வலர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட கிரேட்டா தன்பெர்க் உலகநாட்டு தலைவர்களை நோக்கி, “பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?” என ஆக்ரோஷமாக முழங்கினார். 

கிரேட்டா தன்பெர்க்

அவரது வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அமைதிக்கான நோபல் பரிசுக்கும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் பரிந்துரை செய்யப்பட்டார். 
இந்நிலையில், போர்சுக்கல் நாட்டின் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை கிரேட்டா தன்பெர்க் ஏற்று கொண்டுள்ளார் என போர்ச்சுக்கல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் குறித்த 25-வது மாநாடு ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மட்ரிட்டில் வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்பெயின் செல்லும் தன்பெர்க் போர்ச்சுக்கல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...