Main Menu

காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளதுடன் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது

இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதேவேளை மாநிலங்களவையிலும் இது குறித்த விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  இந்தநிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா எனும் எண்ணம் நீண்ட காலம் நிலைக்க வேண்டுமென்றால் மக்கள் குரல்களை எழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு அரசு செய்திருப்பது நாட்டு மக்களில் பலரின் எதிர்ப்பையே பெற்றுள்ளது. அனைத்து மக்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும். நம் குரல்களை உயர்த்துவதன் மூலம்தான் இந்தியா என்ற கருத்தை நாம் நீண்ட காலத்துக்கு தக்க வைக்க முடியும். இது மிகவும் முக்கியமான ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ஒரு ஆழமான நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆகவே நல்ல சிந்தனையாளர்கள் பலர் ஒத்துழைப்பு வழங்குவது ஒன்றுதான் இந்த இருண்ட சக்திகளுக்கு சவாலாக இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நினைவுக் கூட்டத்தில் பேசிய போதே மன்மோகன் சிங் இவ்வாலறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பகிரவும்...