Main Menu

காபுல் பல்கலைக் கழகத்தின் மீது தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று (திங்கட்கிழமை) நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல் ஒரு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் தொடர்புபட்டிருந்ததாகவும் அவர்களில் ஒருவர் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய இருவரும் பாதுகாப்புத் தரப்பினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஆப்கான் உள்துறை அமைச்சின் பேச்சாளர் தாரிக் அரியன் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அநேகர் பல்கலைக்கழக மாணவர்கள் என காபுல் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் இன்றைய தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே இது ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட தீவிர பயங்கரவாத குழுவொன்று செய்திருக்கலாம் எனக்குறிப்பிடப்படுகிறது.

பகிரவும்...