Main Menu

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மதியம் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. 

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து  சுழற்சி முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றைய தினம் அதனை நினைவுகூர்ந்ததுடன் இவ்வருடம் முதலாம் திகதி 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து கொழும்பு சிறையில் தமிழ் அரசியல் கைதியான  செல்லப்பிள்ளை மகேந்திரன் உயிரிழந்தார்.

அவரிற்கு அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தியேற்றி ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்ததுடன் இவரிற்கு நடந்தது போல் நடக்காது எமது பிள்ளைகள் எமக்குக் கிடைக்க வேண்டுமெனக் கோரி  காணாமற்போன உறவுகள் தமது பிள்ளைகளுடன் ஒன்றிணைந்து இப்போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும்  போராட்டம் மேற்கொண்டிருந்தார்கள்.

பகிரவும்...