களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான 3 புதிய சட்டமூலங்கள் – நீதி அமைச்சர்
களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக அடுத்த காலாண்டுக்குள் 3 புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
களவாடப்பட்ட சொத்துக்களை மீட்டல், நிதிக் குற்றங்களைத் தடுத்தல், கடனாளிகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட குற்றச் செயல்கள் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு, நொடிப்பு நிலை சட்டமூலங்கள் மற்றும் கணக்காய்வுச் சட்டத் திருத்தங்கள் என்பனவே அடுத்த காலாண்டுக்குள் சமர்ப்பிக்கப்படும் என ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பகிரவும்...