Main Menu

கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை!

புதிய கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களையும் சேர்ந்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியாவிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள மனுவில், ‘புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வழங்க வேண்டும்.

வரைவின் மீது அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்பதற்கு முன் அவசரமாக அதை நடைமுறைப்படுத்தக்கூடாது’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மனுவில், கனிமொழி, ஆ.ராசா, டொக்டர் செந்தில்குமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாணிக் தாக்கூர், டொக்டர்.எ.செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

பகிரவும்...