Main Menu

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நிலையில், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக வைத்தியர் அசங்க கோனார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில், கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.பி.யூ.எம்.ரங்கவிடம் “அததெரண” வினவியது.

இந்த விடயத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்தியரை இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வைத்தியரை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான எழுத்துமூல அறிவித்தல் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...
0Shares