Main Menu

கமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி மேல் நீதிமன்றம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார்.
கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.

இதற்கிடையே, கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி ஐகோர்ட்டில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் கமல் பேசியதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே?என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பகிரவும்...