Main Menu

கடும் வெப்பம் – தேன் உற்பத்தி பாதிப்பு!

பிரான்ஸில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதம் நிலவிய கடும் வெப்பம் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தோல் நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் கடும் வெப்பம் காரணமாக தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Hérault மற்றும் Gard நகரில் 46°c வெப்ப நிலை பதிவாகியிருந்தது.

இதன்காரணமாக குறித்த பகுதியிலிருந்த 80 வரையான பெரிய தேன் கூடுகள் அழிவடைந்துள்ளதாகவும், ஒவ்வொரு தேன் கூட்டிலும் 40,000 தொடக்கம் 60,000 வரை தேனீக்கள் இருந்ததாகவும் அவை அனைத்தும் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34°உ தொடக்கம் 36°உ வரையான வெப்பம் மாத்திரமே தாங்கக்கூடிய தேனீக்கள் இந்த அளவான (46°c ) வெப்பத்தை தாங்குவது சாத்தியமே இல்லாதது என தேனீ வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.