Main Menu

விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு

விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக பிரத்யேக துப்பாக்கி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மனிதர்களைச் சுமந்து செல்லும் ரொக்கெட்டுகளை காடுகள் நிறைந்த கிழக்குப் பகுதிக்கு அனுப்ப ரஷ்யா தீர்மானித்துள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் தரையிறங்கும் விண்வெளி வீரர்கள் வன விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குறித்த துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முயற்சி வெற்றியளிக்குமா இல்லையா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பகிரவும்...