Main Menu

இங்கிலாந்து இளவரசர் மூன்றாம்
சார்லஸ் பிரான்சுக்கு வருகை

இங்கிலாந்து இளவரசர் மூன்றாம்
சார்லஸ் பிரான்சுக்கு வருகை தர உள்ளார்.

இளரவராக அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் அவர் பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைநகர் பரிசுக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்திக்கிறார். செனட் சபை உறுப்பினர்களையும் சந்திக்கிறார். பின்னர் நாட்டின் தென்மேற்கு பகுதியான Versailles நகருக்கும் பயணிக்க உள்ளார்.

பரிசின் Arc de Triomphe பகுதியில் உள்ள ‘Unknown soldier’ நினைவுத் தூபிக்கு ஜனாதிபதி மக்ரோனுடன் செல்லும் மூன்றாம்
சார்லஸ், அங்கு மரணித்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்ததன் பின்னர், ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை புதுப்பிக்க இந்த பயணம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இருந்து புறப்பட்ட சில நாட்களின் பின்னர் மூன்றாம் சார்ல்ஸ் ஜெர்மனிக்கு பயணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...