Main Menu

மக்ரோனின் திட்டங்கள் – மக்களின் ஆதரவும் எதிர்ப்பும்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் அறிவித்திருந்த ஓய்வூதிய வயதெல்லை உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இம்மானுவல் மக்ரோன், 62 வயதாக உள்ள ஓவ்யூதிய வயதை 65 ஆக அதிகரிப்பதாகவும் – ஆசிரியர்களுக்கு 10% வீத ஊதிய உயர்வும் – சாரதிகளுக்கான redevance audiovisuelle கட்டண இரத்தும் செய்வதாகவும் மூன்று திட்டங்களை அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,

ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் (64% வீதமானவர்கள்) எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாரதிகளுக்கான redevance audiovisuelle கட்டணத்தை (தற்போது வருடத்துக்கு €138 யூரோக்கள்) முற்றாக நீக்குவதாக மக்ரோன் உறுதியளித்திருந்தார். இந்த திட்டத்துக்கு 86% வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களின் ஊதியம் எவ்வித நிபந்தனைகளும் இன்றில் 10% வீதத்தால் அதிகரிக்கப்படும் என மக்ரோன் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த சம்பள உயர்வுக்கு 69% வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Elabe நிறுவனம் L’Express மற்றும் SFR ஊடகத்தினருடன் இணைந்து மேற்கொண்ட புதிய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.  

பகிரவும்...