Main Menu

ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டிகள் இடைநிறுத்தம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டித் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் இறுதி உலக தகுதி குத்துச்சண்டை போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

லண்டனில் ஐரோப்பிய தகுதி ஏற்கனவே நடந்து கொண்டிருந்தது மார்ச் 24ஆம் திகதி வரை இயங்குவதால் செவ்வாய்க்கிழமை மாலை அமர்வுக்குப் பிறகு இது முடிவடையும் என சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

பிற பிராந்தியங்களுக்கான தகுதி செயல்முறை குறித்த விபரங்களை பிற்காலத்தில் வழங்கும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு கூறியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொரோனா வைரஸ் ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகின்ற நிலையில், எவ்வித பின்வாங்கலும் இல்லாமல் ஜப்பான் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், அண்மையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

தற்போது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகின்ற நிலையில், ஒலிம்பிக் போட்டித் தொடரை ஒத்திவைக்குமாறு உலகநாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
………….

உலகின் மிகப் பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு ஜப்பான் கடந்த இரண்டு வருடங்களாக, பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட விளையாட்டு அரங்குகள் தற்போது போட்டிகளை நடத்த தயாராகவுள்ளது.

குறித்த கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரங்கத்தின் கூரைகள் மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை குளிர்சியாக வைத்திருக்க முடியுமென வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.

குறித்த கோடைக்கால ஒலிப்பிக் தொடரில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமையை போட்டி அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல, கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது

டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 22 விளையாட்டுக்களில் இருந்து 540 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

பகிரவும்...