Main Menu

ஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்

அடுத்த வருடத்துக்குப் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவர் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லையை பீபா உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வழமையாக ஒலிம்பிக் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லை 23 ஆகும்.

எனினும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டுள்ளதால் இவ் வருடம் விளையாட தகுதிபெறவிருந்த வீரர்களுக்கு அடுத்த வருடம் விளையாட சந்தர்ப்பம் வழங்கும் வகையில் வயதெல்லையில் பீபா மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகின்றது.

1997 ஜனவரி 1 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் டோக்கியோ 2020 ஒலிம்பிக் கால்பந்தாட்டத்தில் விளையாட அனுமதிக்கப்படலாம் என கருதப்படுகின்றது. எனினும் இது குறித்து பீபாவின் தீர்மான சபை இன்னும் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை.

பகிரவும்...