Main Menu

ஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மனிதர்களுக்கு பரிசோதிக்கும் இந்த மூன்றாம் கட்ட நடவடிக்கையை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஒப் இந்தியா என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

புனேயின் சாசோன் பொது மருத்துவமனையில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இங்கிலாந்தில் ஒருவருக்கு உடல் நலபாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்த கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

எனினும் மீண்டும் பரிசோதனையை நடத்த செப்டம்பர் 15ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...