Main Menu

ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் வலுவடைந்து வருவதாக எச்சரிக்கை!

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் வலுவடைந்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சிரியாவிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறி வருவதை சாதகமாகப் பயன்படுத்தி ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுத்து வருவதாக இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைத்திருந்த ‘இஸ்லாமிய சாம்ராஜ்யம்’ வீழ்ச்சியடைந்திருக்கலாம்.

அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகளின் உதவியுடன் இராக் இராணுவமும், சிரியா இராணுவமும் அவர்களைத் தோற்கடித்துள்ளன.

எனினும், ஈராக்கில் தங்களது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திறனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் அதிகரித்து வருகின்றனர். சிரியாவிலும் அவர்களது பலம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேறி வருவதால், உள்ளூர் இராணுவத்தின் பலம் குறைந்து வருகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுத்து வருகின்றனர்.

ஈராக் மற்றும் சிரியா படையினரால் நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

மேலும், பல முனைத் தாக்குதல்களை நடத்தும் திறனோ, தாங்கள் கைப்பற்றிய பகுதிகளைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் சக்தியோ அவர்களுக்குக் கிடையாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...