Main Menu

எமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ்


எமது ஈ.பி.டி.பியுடனான புதிய பயணம் மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என ஈரோஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட பிரசார பொறுப்பாளர் ஆறுமுகநாதன் முரளி தெரிவித்தார்.

வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடனான ஈரோஸின் இனைந்ததை அடுத்து இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஈரோஸ் அமைப்பு இம் முறை தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு நட்பு ரீதியான ஒத்துழைப்பை கொடுக்க முன்வந்துள்ளதுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

1976 இன் பிற்பகுதியாக இருக்கட்டும் 1980 ஆம் ஆண்டின் பிற்பகுதியாக இருக்கட்டும் ஈழப்புரட்சி அமைப்பான ஈரோஸின் கருத்துக்களை உள்வாங்கி ஈ எழுத்தைக்கொண்ட அனைவரும் ஓர் குடும்பமாக ஓர் கருத்தில் இயங்கியவர்கள். நாங்கள் கருத்து ரீதியாக ஒன்றுபட்டவர்கள்.

அந்தவகையில் காலங்கள் பல கடந்த பின்னர் அந்த ஒருங்கிணைப்பு கருத்து ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு செயற்பாடு மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளரொருவர், ஈரோஸ் அமைப்பு ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியுடன் இணைந்தே போட்டியிடுகின்றது. ஈ.பி.டி.பியை பொருத்தவரையில் ஒரு கொள்கையோடு அன்றில் இருந்து இன்றுவரையில் அரசோடு இருந்தாலும் தனித்து போட்டியிடும் தன்மையை கொண்டவர்கள். அவ்வாறான நிலையில் நீங்கள் ஈ.பி.டி.பியோடு கூட்டுச்சேர என்ன காரணம் என கேட்டபோது,

அந்த நேரத்தில் நாங்கள் யாருடன் இணைந்து வேலை செய்வது என்ற தெளிவற்ற நிலையில் முடிவை எடுத்திருந்தோம். அப்போது ஈ குடும்பங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. அதனை அமைச்சரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே ஒருங்கிணைப்பு இல்லாமையால் எங்கள் பாதைகள் அங்கிகுமிங்குமான பாதையில் போயிருந்தது. இனிவரும் காலங்களில் ஈ குடும்பத்திற்குள் கோணல் மாணலான பேச்சுக்கு இடமிருக்காது.

அத்துடன் அனைத்து தேர்தலையும் ஏதோவொரு வகையில் முகம்கொடுக்க வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இருந்தது. 1988 ஆம் ஆண்டு இந்த மக்கள் 13 ஆசனங்களை எமக்கு வழங்கி மக்கள் பிரதிநதிகளாக இலங்கை அரசாங்கத்திடம் எம்மை அனுப்பியிருந்தனர். சில விடயங்களால் அந்த 13 ஆசனங்களையும் நாங்க்ள பதவி துறந்து மீண்டும் வழமையான வாழ்க்கைக்கு வந்திருந்தோம். ஆகவே எமக்கு அரசியல் என்ற விடயம் புதிதல்ல” என தெரிவித்தார்.

பகிரவும்...