Day: June 8, 2026
எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள் ; அரசியல் நோக்கத்துக்காக மகனை பலிகொடுக்க என்னால் முடியாது – சுரேஸ் சலேவின் தாய் கோரிக்கை

எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள். நாட்டுக்காக நான் அவரை ஒப்படைத்தேன். ஆனால் அரசியல் நோக்கத்துக்காக பலிகொடுக்க என்னால் முடியாது என்று சுரேஸ் சலேவின் தாய் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோரிக்கை விடுத்துள்ளார். தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமதுமேலும் படிக்க...
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் நேற்று (7)மேலும் படிக்க...
காற்பந்து வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் ‘Trionda’ ஸ்மார்ட் பந்து

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 பிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடர், புதிய தொழில்நுட்பப் புரட்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. அதிகளவிலான நாடுகள் பங்கேற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக, ‘அடிடாஸ்’ (Adidas)மேலும் படிக்க...
7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரியாவை சென்றடைந்துள்ளார். ஷி ஜின்பிங் பியோங்யாங்கை வந்தடைந்துள்ளதாக, சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவா செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் பலன்களை வழங்குவதற்கு ஈடாக, வடகொரியா மீதானமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 15பேர் பலி , 129 பேர் காயம்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது. இந்த பேரிடர் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை: காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவு

வயதான தந்தையை கவனித்துக் கொள்ளாத 3 மகன்களுக்கு சிறை தண்டனை விதித்து காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவிட்டார். காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (84). இவரது மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், 2018-ம் ஆண்டு தனது மகன்கள் வரதராஜன்,மேலும் படிக்க...
அண்ணாமலை கட்சி பாஜகவின் மறுபிறப்பு: முத்தரசன் விமர்சனம்

அண்ணாமலை தொடங்கும் கட்சி, பாஜகவின் மறுபிறப்புதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டால்தான் டெல்டாவில் 4.5 லட்சம்மேலும் படிக்க...
திறைசேரி நிதி காணாமல் போனமை தொடர்பில் கலந்துரையாட அரசாங்க நிதிப் பற்றிய குழு கூடவுள்ளது

திறைசேரியிலிருந்து செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணைய குற்றவாளிகளிடம் சென்ற சம்பவம் தொடர்பாக அரசாங்க நிதிகள் பற்றிய குழுவில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதிப் பற்றிய குழு இன்றுமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச்மேலும் படிக்க...
உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு

போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஆதரிப்பதாகவும், இதில் ஐரோப்பா ஒரு பங்கை வகிக்கும் என்றும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07)மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ‘பெண்கள் சந்திப்பு’ நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் போது பெண்களின் சமூக பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. முன்னதாகமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்

சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் (08) இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது. பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜாமேலும் படிக்க...
