Main Menu

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது அரசமுறை பயணமாக இது அமையவுள்ளது. முதலாவது பயணமாக நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்றிருந்தார்.

அந்தவகையில் அவர் அடுத்து மேற்கொள்ளும் இந்த வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை அதிகரிப்பதாகும்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் அடுத்த ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் அரச முறைப் பயணமாக இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் வெளிநாட்டு தலைவராக அவர் இருப்பார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...