Main Menu

உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு!

உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம், சீனாவின் கைப்பாவையாக செயற்பட்டுவதாக ட்ரம்ப் அண்மையில் கூறியிருந்ததன் பின்னணியில், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதுகுறித்து கூறுகையில், ‘இன்று உலக சுகாதார நிறுவனத்துடனான எங்கள் உறவை துண்டித்துவிட்டு, அந்த நிதியை மற்ற உலகளாவிய பொது சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளோம்.

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. சீன அரசாங்கத்தின் தவறான செயலின் விளைவாக உலகம் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது

சீனா உலகளாவிய பெருந்தொற்றை பரப்பியது. இதன் விளைவாக அமெரிக்கா ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகத்தை தவறாக வழிநடத்த உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா அழுத்தம் கொடுக்கின்றது’ என கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் நாடான அமெரிக்கா, கடந்த 2019ஆம் மட்டும் 400 மில்லியன் டொலர்களுக்கு மேல் நிதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...