Main Menu

உலக அளவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது!

உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியை கடந்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரித்தானியா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகளவான கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாடுகள் சிலவற்றில் புதிய கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து, தொற்றுப் பரவல் மேலும் அதிகரிக்க கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 26 இலட்சத்து 99 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 3 இலட்சத்து 81 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்து அதி கூடிய தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட இந்தியாவில் 1 கோடியே 4 இலட்சத்து 51 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 1 இலட்சத்து 51ஆயிரத்து 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்தும் பிரேசிலில் 80 இலட்சத்து 75 ஆயிரத்து 998 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 2இலட்சத்து 2ஆயிரத்து 657பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...