Main Menu

உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது!

உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

த எக்கொனோமிஸ்ட் ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 60 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிஜிட்டல் பாதுகாப்பு, உட்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் தனியாள் பாதுகாப்பு ஆகிய நான்கு காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை டோக்கியோவும், இரண்டாவது இடத்தினை சிங்கப்பூரும், மூன்றாவது இடத்தினை ஒசாகாவும், நான்காவது இடத்தினை ஆம்ஸ்ரடாமும், ஐந்தாவது இடத்தினை சிட்னியும், ஆறாவது இடத்தினை ரொறன்றோவும், ஏழாவது இடத்தினை வொசிங்டனும் பிடித்துள்ளன.

வட அமெரிக்க நகரங்களுள் முதல் பத்து இடங்களுக்குள் ரொறன்றோவும், வொசிங்டனும் மாத்திரமே தெரிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.