Main Menu

உயர்நீதிமன்றங்களில் 51 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன – ரவிசங்கர் பிரசாத்

நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் 51 இலட்சத்து 52 ஆயிரத்து 921 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வழக்கு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு அளித்த தகவலின்படி 16 ஆயிரத்து 845 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

இந்த நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டதன் மூலம் வழக்கைப் பதிவு செய்வதற்கான விவரங்கள், வழக்கின் நிலவரம், தினந்தோறும் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், இறுதி தீா்ப்பு தொடா்பான தகவல்கள் மின்னணு நீதிமன்றங்களின்  வலைதளம் அவற்றின் செல்லிடப்பேசி செயலி,  கணினிமயமாக்கப்பட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள நீதித்துறை சேவை மையங்களில் பொதுமக்களுக்கும் அவா்களின் வழக்குரைஞா்களுக்கும் கிடைக்கும்.

தற்போது 6 மாநிலங்களில் இணையவழியில் விசாரணை நடத்தும் 7 மெய்நிகா் நீதிமன்றங்கள் உள்ளன. இதில் டெல்லியில் 2 மெய்நிகா் நீதிமன்றங்கள் உள்ளன.

நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் 51 இலட்சத்து 52 ஆயிரத்து 921 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 36 இலட்சத்து 77 ஆயிரத்து 089 உரிமையியல் வழக்குகளும்  14 இலட்சத்து 75 ஆயிரம் 832 குற்றவியல் வழக்குகளும் அடங்கும்.

அதேவேளையில் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 94 இலட்சத்து 49 ஆயிரத்து 268 உரிமையியல் வழக்குகள்,  2 கோடியே 50இலட்சத்து 23ஆயிரதத்து 800 குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 3 கோடியே 44 இலட்சத்து 73 ஆயிரத்து 68 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...