Main Menu

உத்தரப்பிரதேச இடைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி!

உத்தர பிரதேசம் மற்றும் திரிபுராவில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட யுவராஜ் சிங் 74,168 வாக்குகள் பெற்றார்.  அவரை தொடர்ந்து சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட மனோஜ் பிரதாப் 56,397 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற யுவராஜ் சிங் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதேபோல், திரிபுரா மாநிலத்தின் பாதர்காட் தொகுதியில் நடைபெற்ற பாஜக வேட்பாளர் மிமீ மஜும்தார் வெற்றி பெற்றுள்ளார்.  இவர் சி.பி.ஐ (எம்) கட்சியின் வேட்பாளர் புல்தி பிஸ்வாசை விட 5260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஹமீர்பூர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 23ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...