Main Menu

உணவுச் சீட்டின் தொகை மறுபடியும் மாற்றம்?

ஒரு மாத்திற்கு முன்பு 19€க்கு குறைக்கப்பட்ட உணவுச் சீட்டின் தொகை மறுபடியும் மாற்றமடையவுள்ளது.  இச்சீட்டின் தொகை கொறோனாவால் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடிக்காக 38€க்கு ஏற்றப்பட்ட நிலையில் ஒரு மாத்திற்கு முன்பு 19€க்கு குறைக்கப்பட்டது. ஆனால் அத்தொகையை மீண்டும் 25€க்கு பொருளாதார அமைச்சர் Bruno Le Maire ஏற்றவுள்ளார்.  பொதுமக்களின் வாங்கும் திறனைக் குறித்து நடத்தப்பட்ட பாராளுமன்ற வாதத்தில் பல உறுப்பினர்கள் இந்த திட்டத்தை எடுத்துக் கூறியதால் இனியும் உணவுச் சீட்டின் தொகையை ஏற்ற அனுமதிக்கமாட்டேன் எனக் கூறிய பொருளாதார அமைச்சர் இந்த மாற்றத்தை அனுமதித்துள்ளார். இந்த நிதியியல் நெருக்கடியில் வாடிக்கையாளர்களை திடீரென கைவிடாமல் மெல்லமெல்லமாக நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இதை அனுமதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பகிரவும்...