Main Menu

உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும்: ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

‘யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. தேவைப்பட்டால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்’ என புடின் மேலும் கூறினார்.

இது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

உக்ரைனின் நட்பு நாடுகள் ஆயுத விநியோகத்தை முடுக்கிவிட்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதை உறுதி செய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஆனால், கிழக்கில் ரஷ்யா தனது முயற்சிகளுக்கு தடையாக இருப்பதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த வாரம், தலைநகர் கிவ்வைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறிய பின்னர், டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா பெரும் தாக்குதலை நடத்தியது.

ஆனால் ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, ரஷ்யப் படைகள் கடுமையான உக்ரைனிய எதிர்ப்பை சமாளிப்பது கடினமாக உள்ளது மற்றும் அவர்கள் இழப்புகளை சந்திக்கிறார்கள் என கூறினார்.

பகிரவும்...