Main Menu

ஈஸ்டர் தினம் இன்று – நாடளாவிய ரீதியில் பிரார்த்தனைகளும் கொண்டாட்டங்களும்

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினத்தை கொண்டாடுகின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த ஈஸ்டர் ஞாயிறு கிறிஸ்தவர்களால் கொண்டாடுப்படுகிறது.

இலங்கையிலும் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

கிறித்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இடம்பெற்றிருந்தன.

இந்தத் தாக்குதல்களில் 39 வெளிநாட்டவர்கள் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டிருந்ததோடு 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

அதேநேரம், கடந்த, ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை பிரார்த்தித்தும் கொரோனா தொற்றில் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் நாடு மீள வேண்டும் என வலியுறுத்தியும் இன்றையதினம் சிறப்பு பழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...