Main Menu

ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

பிரித்தானியாவின் ஜிப்ரால்டர் மாகாண அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

அமெரிக்க நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஏட்ரியன் தர்யா 1’ எண்ணெய்க் கப்பல் மீது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கப்பலுக்கு உதவி செய்பவர்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என குறித்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட சிரிய நிறுவனத்துக்கு மசகு எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, ஈரானின் ‘கிரேஸ் 1’ எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டர் நீரிணைப்பகுதியில் பிரித்தானியா கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி சிறைப்பிடித்தது. எனினும், குறித்த கப்பல் இரு வாரங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள குறித்த கப்பல் தற்போது ‘ஏட்ரியன் தர்யா 1’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவினால் விடுக்கப்பட்டுள்ள ஈரானின் ‘ஏட்ரியன் தர்யா 1’ எண்ணெய்க் கப்பல் சிரியா நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...