Main Menu

இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த இடம் கொடுக்க மாட்டேன் : யாழில் பொன்சேகா

இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரித்து நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்ல ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று எனக்கும் ஒத்துழைப்பு வழங்கினீர்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம்.

 இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்காது தேர்தலை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும் யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று பிரிவினை இல்லை ஒரு தாய் மக்களாகவே நாங்கள் பார்க்கின்றோம் இனிமேலும் இப்படியான யுத்தம் இந்த நாட்டில் இடம்பெறமாட்டாது அதற்கு இந்த இடத்தில் நாங்கள் உறுதியளிக்கின்றோம்.

யுத்த்தின் பிற்பாடு நீங்கள் சுதந்திரமடைந்தீர்கள் இப்பொழுது இருக்கின் ராஜபக்ச யுகம் இந்த இடத்தில் எதையும் செய்யவில்லை பாதைகளை அமைத்துக் கொடுத்து அதிலிருந்து கையூட்டுக்களைப் பெற்றதுதான் அவர்கள் செய்த காரியம். 

ஆனால் சஜித் பிறேமதாஸவின் ஆட்சியில் அவ்வாறானதொரு நிலை இருக்காது. விவசாயம், கடற்றொழில் மேம்பாடு, கல்வி மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். நாங்கள் பொய்களை கூற விரும்வில்லை. செய்ய முடிந்தவற்றையே கூற விரும்புகிறோம். இங்கு சிலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றார்கள் ராஜபக்சவிடம் பணத்தை பெற்று வாக்குகளை சிதறடிப்பதற்கு அந்த முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். நீங்கள் தெ ளிவுடன் செயற்படவேண்டும்.

தெற்கிலுள்ள மக்களை ராஜபக்ச குடும்பத்தினர் ஏமாற்றியுள்ளார்கள் மக்களிடம் இருக்கும் பணங்களை சூறையாடுவதுதான் அவர்களின் வேலையாகும். வடக்கு கிழக்கு தெற்கை பிரிவினை இன்றி ஒரு தாய் மக்களாகவே பார்க்கின்றோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாட்டை முன்கொணரவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகொடுத்து உதவவேண்டும்.

நாங்கள் ஒரு போதும் பொய்கூறமாட்டோம் முடியுமானதை முடியும்என்று சொல்லுவோம் நல்ல விடையங்கள் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக ஒரு நாட்டில் அமைதியான வாழ்க் கையை நான் விரும்புகிறேன். என்னை தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்கும் படி சஜித் கூறியுள்ளார் நான் அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன். அதனைப் பெறுப்பேற்ற பின்னர் நாடளாவிய ரீதியில் ஒரு தாய் மக்களாக இன மத மொழி கட்சி பேதங்கள் இன்றி ஒரே அமைப்பாக பாதுகாப்பு வழங்குகின்ற நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.

இந்த நாட்டில் இறமை ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக சகல முயற்சிகளையும் எடுப்போன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று இனிவரும் காலங்களில் இடம்பெறாது. இளைஞர்களை நல்ல பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மது பாவனையை முற்றாக ஒழித்து இளைஞர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல முயற்சிப்போம் மது பாவனை தொடர்பான பிரச்சினைகளை இரண்டு வருடங்களுக்குள் இல்லாது ஒழிப்போம்.

ஊழல் மோசடிகளை மக்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள் இதனை இல்லாது செய்வதற்காக அனைத்து வித நடவடிக்கைளையும் எடுப்போம். எந்த விதத்திலும் இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை கொல்வதற்கோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.

 கோத்தாபய ராஜபக்ச தண்ணீர் கேட்பவர்களுக்கும், ஊழியர் சேமலாப நிதியைக் கேட்பவர்களையும் மண்ணெண்ணை கேட்பவர்களையும் துப்பாக்கியால் பதில் கூறினார்கள் அத்தகயை சம்வங்கள் எங்களுடைய ஆட்சியில் இடம்பெறாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் கோத்தபாய ராஜபக்சவின் அனைத்து செயற்பாடுகளுக்கும் முடிவு கட்டுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 

அவர் வழிநடத்தியவர்கள் வேறு திசைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் மேலும் யுத்தத்தை நடாத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பதை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் ஒரு போதும் பின்நிற்கப்போவதில்லை என்றார்.

பகிரவும்...