Main Menu

இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது- எடப்பாடி பழனிசாமி

அதிமுக 51ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கிளை செயலாளராக இருந்து தற்போது பொறுப்பிற்கு வந்து உள்ளேன். அதனால் ஒரு ஒரு பொறுப்பாளருக்கு என்ன கஷ்டம் என்பது எனக்கு நன்கு புரியும். 10 முறை அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். சட்டமன்றத்தின் வெளியில் வந்து சட்டையை கிழித்து கொண்டு ஸ்டாலின் சாலையில் அமர்ந்தார். அவர் சட்டையை யாரும் தொடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ்., எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது. வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்து வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெல்லும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெல்லும். நாம் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி சட்டமன்ற தொகுதிகளை வென்றுள்ளோம். ஒரு சில மாவட்டத்தில் வென்று இருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்து இருக்கும். சற்று உழைப்பு குறைவாக இருந்த காரணத்தால் இன்று ஸ்டாலின் முதல்வராகிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...