Main Menu

இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்

இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில். வாகன வசதி கிடைக்காத அவர்கள் நடந்தே நாட்டின் எல்லை வரை செல்ல முடிவெடுத்து ஒரு குழுவாக சென்றுள்ளனர்.

இது தொடர்பாக படங்கள் வெளியான நிலையில் குண்டுகள் பொழியும் சூழலில் மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுடன் தூதரகங்கள் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் வரை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மத்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பகிரவும்...