Main Menu

ஆப்கானிஸ்தானில் புர்கா மாவட்டத்தை கைப்பற்றும் சண்டையில் 37 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் உள்ள முக்கிய மாவட்டத்தை கைப்பற்ற முயன்ற தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் வெடித்த மோதலில் 37 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. 

பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், பாக்லான் மாகாணத்தில் உள்ள புர்கா மாவட்டத்தை கைப்பற்ற வந்த தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இன்று அதிகாலை வெடித்த மோதலில் 30 பயங்கரவாதிகளும் 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.