அறுகம்பைக்கு செல்வதை தவிர்க்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை மீளப் பெறுமாறு கோரிக்கை
மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளுக்கு முன்னதாக வழங்கிய பயண ஆலோசனையை மீளப் பெறுமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் தங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் கடந்த அக்டோபர் 23 ஆம் திகதியன்று எச்சரிக்கையை வெளியிட்டது.
இந்த அச்சுறுத்தல் காரணமாக, மறு அறிவித்தல் வரை அகம்பைப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், தற்போது குறித்த பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பயண ஆலோசனையை மீளப்பெறுமாறு கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பகிரவும்...