Main Menu

அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

அருண் ஜெட்லிபுதுடெல்லி:
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி (வயது 66), கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி சேர்க்கப்பட்டார். சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. 
அவருக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவரது உடல்நிலை தொடர்பாக 10ம் தேதிக்கு பிறகு மருத்துவமனை தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர்.
அருண் ஜெட்லிக்கு எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை. இதனால் மருத்துவமனைக்கு தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

பகிரவும்...