Main Menu

அரசியல் கலாசாரத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- சஜித்

இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுடன் இணைந்து விசேட காணொளியொன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இன்று வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.

சவால்களை ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டும்.

மக்கள் இன்று அரசமைப்பு மாற்றமொன்றை எதிர்ப்பார்க்கிறார்கள். 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார்கள்.

இதனை நிறைவேற்ற வேண்டும். பெரும்பான்மையான மக்கள் இன்று எம்முடன் இருக்கிறார்கள்.

இந்தப் பலத்துடன் நாம் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். எமது பயணம் கடினமானதாக இருந்தாலும் இதனை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.- என்றார்.

பகிரவும்...