Main Menu

அரசியல்வாதிகள் அடங்கிய ஆணைக் குழுவின் நோக்கம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

நீதிமன்ற வழக்குகளை நடத்துவது குறித்து முடிவுகளை எடுக்க அரசியல்வாதிகள் அடங்கிய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதா என பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு கூறினார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து சபாநாயகரிடம் கேட்டபோது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனக்கு உத்தரவு கிடைக்கவில்லை என தெரிவித்ததாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த விவகாரத்தை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அறிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை மேற்கோள்காட்டுவதாக குற்றம் சாட்டிய அவர் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியை அடக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சி என்றும் தெரிவித்தார்.

குற்றவாளிகளை விடுவிக்கவும், அப்பாவிகளை சிறையில் அடைக்கவும் அதிகாரிகள் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டினார்.

பகிரவும்...